TajMahal -Lyric

தாஜ் மஹால்
ஏ ஆர் ரஹ்மான்
(2000)

பாடல்: திருப்பாச்சி அரிவாள
குரல்:
வரிகள்: வைரமுத்து

திருப்பாச்சி அரிவாள…தீட்டிகிட்டு வாடா வாடா… (2)

திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா

போர்தானே நம்ம ஜாதிப் பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில் புலினகமா மாறும் வாடா
வெள்ளாட்டுக் கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா

(திருப்பாச்சி)

எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன எங்கசியா மூக்கறுத்தாக
எங்காட்ட திருடித் தின்னு சப்புகொட்டு நின்னவன எங்காத்தா நாக்கறுத்தாக
எங்க குறும்பாட்டு கறிக்கொழம்பு குளித்தலையில் மணமணக்கும் வாசத்துக்கே எச்சி விட்டீக
நாங்க குளிச்சி அனுப்பிவெச்ச கொறட்டாத்து தண்ணியில ஏண்டியம்மா கறி சமைச்சீங்க
அட கோம்பா மாந்தோப்புல கொலகொலயா காய் திருடி கோவணத்தத் தவறவிட்டீக
அந்த கோவணத்தக் கொண்டுபோய் அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக
அட களவாணி கோத்திரமே காளமாட்டு…
அட களவாணி கோத்திரமே காளமாட்டு…த்திரமே எப்ப நீங்க திருந்தப்போறீங்க

(திருப்பாச்சி)

ஹவ ஹவா எலே ஹவா…

உப்பு தின்னா தண்ணி குடி தப்பு செஞ்சா தலையிலடி பரம்பரையா எங்க கொள்கையடா
மானந்தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழமட்ட மானம் காக்க வீரம் வேணுமடா
அட சோளக்கூழு கேட்டு வந்தா சோறு போட்டு விசிறிவிடும் ஈரமுள்ளது எங்க வம்சமடா
சோறு போட்டும் கழுத்தறுத்தா கூறு போட்டு பங்கு வைக்கும் வீரந்தானே எங்க அம்சமடா
நாங்க வம்புச்சண்டக்குப் போறதில்ல வந்த சண்டைய விடுவதில்ல வரிப்புலிதான் தோத்ததில்லையடா
எங்க உறையவிட்டு வாளெடுத்தா ரத்தருசி காட்டிவைக்கும் வழக்கமெங்க குலவழக்கமடா
நான் தட்டிவெச்சா புலியடங்கும் எட்டு வெச்சா மல உருகும் தொட்டதெல்லாம் துலங்கப் போகுதடா

(திருப்பாச்சி)

திருப்பாச்சி அறிவாள…தீட்டிகிட்டு வாடா வாடா… (3)

——————————————————————————–

பாடல்: சொட்டச் சொட்ட நனையுது (பெண்)
குரல்: சுஜாதா
வரிகள்: வைரமுத்து

அடி நீயிங்கே…அடி நீயிங்கே…

நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானா (2)

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே…அடி நீயிங்கே…
நீயெங்கே நீயெங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே (2)

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே…அடி நீயிங்கே…

உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னிகாத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக காத்து காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
வந்து மூன்று முடிச்சு போடு பின்பு முத்த முடிச்சு போடு என்னை மொத்தமாக மூடு மூடு
நீ எனக்குள் புதையலெடுக்க நானும் உனக்குள் புதையலெடுக்க உயிரின் ஆழம் சென்று தேடு தேடு
இளமையின் தேவை எது எது என்று அறிந்தோம் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் அன்பே நீ சொல்ல வா

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே…அடி நீயிங்கே…

நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே

இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே

——————————————————————————–

பாடல்: அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
குரல்:
வரிகள்: வைரமுத்து

அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
தனனனனா தனதனனா தனனனனா தனதனனா
அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
தனனனனா தனதனனா தனனனனா தனதனனா

கொமரிப்புள்ள கொமரிப்புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
கொமரிப்புள்ள கொமரிப்புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
பருவப்புள்ள பருவப்புள்ள குளிக்கப் போராங்க
அட ஆத்தங்கரப் பறவைகளே அங்கிட்டுப் போயிருங்க

அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே

மஞ்சப் புடிச்சிருக்கா…எங்கள கேட்டுக்க…
மருதாணி புடிச்சிருக்கா…எங்கள கேட்டுக்க…
ம்ம்ம்…நாளைக்கு…
வெள்ள சுண்ணாம்பு வெச்சுக்கிட்டு வெத்தலையப் போட்டுக்கிட்டு
அடினாக்கு செவந்திருக்கான்னு அவனக் கேட்டுக்க
அவனா…இல்ல இல்ல…அவரக் கேட்டுக்க

அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே

——————————————————————————–

பாடல்: கெழக்கே நந்தவனம்
குரல்:
வரிகள்: வைறமுத்து

மச்சக்கன்னி…மயிலுக்குஞ்சு…
ஒத்தக்கண்ணி…சொக்க வாயி…
பேச்சி…மாயி…ராக்கி…வாரீகளா

அடியாத்தி…

கெழக்கே நந்தவனம் கிளியடையும் ஆலமரம்
ஆலமர ஊஞ்சல்கட்டி ஆடப்போரோம் வாரியாடி
வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி
வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி

வடக்கே சொக்கிக்கொளம் தாமரப்பூ வசவசன்னு
தாமரப்பூப் பரிக்க தாவணிப்பூ
வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி

அம்மி அரச்ச…சக்சக் சும்சும்…சக்சக் சும்சும்…
அம்மி அரச்ச அரபட்டுப் போகாத
ஒலக்க புடிச்ச…ஜிங்க்ஜிங்க் சிக்சிக்…ஜிங்க்ஜிங்க் சிக்சிக்…
ஒலக்க புடிச்ச இடிபட்டுப் போகாத
வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி

ஈ காக்கா குருவிக்கும் எடங்கொடுக்கும் ஆகாசம்
எனக்கும் ஒனக்கும் இல்லேன்னா சொளிப்புடும்
ம்ம்ம்…
வண்ணக்கிளி அழைக்குது…வரிக்குருவி கூப்பிடுது கூக்கூக்கூ
வண்ணக்கிளி அழைக்குது வரிக்குருவி கூப்பிடுது
சின்னஞ்சிறு சிட்டே செவ்வன்ன ஓடி வாடி
வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி
ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

——————————————————————————–

பாடல்: ஈச்சி எலுமிச்சி
குரல்: மனோஜ், எஸ் ஜானகி
வரிகள்: வைரமுத்து

மாயே…மாயே யோ…(4)
மாயோ மாயோ மாயோ யோயோ (4)

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சு (2)
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

(ஈச்சி)

மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மாயோ ஓஓஓ…மாயோ ஓஓஓ…

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே
சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே
ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே
பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே
பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே
மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்
நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

(ஈச்சி)
(மாயோ)

தொழுவோடு சேராத பொலிகாள கூட கொடையப் பாத்து மெரளும்
கொடகண்டு மெரளாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரளும்
ம்ம்ம்…
பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே
ஆஆஆ…
தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
ஆஆஆ…
கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

(ஈச்சி)

மாயே…மாயே யோ…(4)

——————————————————————————–

பாடல்: செங்காத்தே செங்காத்தே
குரல்: கலா, குழிவினர்
வரிகள்: வைரமுத்து

செங்காத்தே…செங்காத்தே…செங்காத்தே…
உலகத்தின் பெருமூச்செல்லாம் உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய்
காதல் கதையெல்லாம் நீ அறிவாய்
எங்கள் காதலையும் நீ கேளாய் (2)

அட கருவுக்கு உயிர் தந்த காத்தே எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே
எங்க ஒடம்புக்குள் உலவிடும் காத்தே எங்க உயிர்க்கொரு வழி சொல்லு காத்தே

யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே
யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே யாத்தே யாத்தே யாத்தே

செங்காத்தே…செங்காத்தே…

கல்லரையின் காதலரை நீ எழுப்ப வா வா
அட காதலர் சாகலாம் உண்மைக் காதல் சாகாது
உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது

யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே

யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே
யாத்தே யாத்தே…

உயிர் அழிவதில்லை யாத்தே…உயிர் அழிவதில்லை யாத்தே…

——————————————————————————–

பாடல்: சொட்டச் சொட்ட நனையுது (ஆண்)
குரல்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

அடி நீ எங்கே…அடி நீ எங்கே…
அடி நீ எங்கே…அடி நீ எங்கே…அடி நீ எங்கே

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையொண்ணு குடையொண்ணு தா கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே…நீ எங்கே…
நீ எங்கே நீ எங்கே பூ வைத்தே பூ எங்கே
மழைத் தண்ணி உசிரக் கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹாலக் கட்டிக் கொடுத்தவனும் நாந்தாண்டீ
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையொண்ணு குடையொண்ணு தா கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே…நீ எங்கே…நீ எங்கே

உனக்காக பரிசு ஒன்று கொண்டேன் எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய்
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன் எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய்
எனைக்கண்டு சென்ற கனவே உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையிலாடு மயிலே மயிலே
உன் நாணம் என்ன கண்ணே மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே
நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம் அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை மீண்டும் மழை சேர்த்தது

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையொண்ணு குடையொண்ணு தா கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே…நீ எங்கே…
நீ எங்கே நீ எங்கே பூ வைத்தே பூ எங்கே
மழைத் தண்ணி உசிரக் கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹாலக் கட்டிக் கொடுத்தவனும் நாந்தாண்டீ
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே

நீ எங்கே…நீ எங்கே…நீ எங்கே…
நீ எங்கே…நீ எங்கே…நீ எங்கே…
நீ எங்கே…நீ எங்கே…நீ எங்கே…