Sangamam - Lyric

சங்கமம்
ஏ ஆர் ரஹ்மான்
(1999)

பாடல்: மழைத்துளி மழைத்துளி
குரல்: ஹரிஹரன், எம் எஸ் விஸ்வனாதன்
வரிகள்: வைரமுத்து

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

(மழைத்துளி)

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க - என்ன
ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்

(மழைத்துளி)

தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு

நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்

(மழைத்துளி)

மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும் - உயிர்
கலந்தாடுவோம் நாளும் மகனே
நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லுய சொல்லு மகனே வா
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது
மகனே…
காற்றுக்கு ஓய்வென்பதேது…அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது…கிடையாது

(ஆலாலகண்டா)

——————————————————————————–

பாடல்: வராக நதிக்கரை ஓரம்
குரல்: ஷங்கர் மஹாதேவன்
வரிகள்: வைரமுத்து

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணு தக்கு தக்கு தக்குங்குது…ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது…ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது…ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

(வராக)

பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு (2)
பறந்துவந்து…ம்ம்ம்ம்ம்…விருந்து கொடு…ம்ம்ம்ம்ம்
மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு
மயக்குத்துக்கு மருந்தொண்ணு குடு குடு
ஓஓஓ காவேரிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி
என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி

(கண்ணு தக்கு)
(வராக)
(கண்ணில்)
(கண்ணில்)

நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன் (2)
நிழலுக்குள்ள…ம்ம்ம்ம்ம்…குடியிருக்கேன்…ம்ம்ம்ம்ம்
ஒடம்பவிட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க
ஓஓஓ ஒத்த விழிப்பார்வை ஊடுருவப் பார்த்து தாப்பா தெரிச்சிடுச்சு
தாப்பா தெரிச்சிடுச்சு

(கண்ணு தக்கு)
(வராக)
(வராக)
(கண்ணில்)
(கண்ணில்)

தானா தந்தனான தானனான(4)

——————————————————————————–

பாடல்: ¦ºளக்கியமா கண்ணே ¦ºளக்கியமா
குரல்: நித்யஸ்ரீ
வரிகள்: வைரமுத்து

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்

¦ºளக்கியமா கண்ணே ¦ºளக்கியமா
¦ºளக்கியமா கண்ணே ¦ºளக்கியமா
¦ºளக்கியமா ¦ºளக்கியமா ¦ºளக்கியமா

¦ºளக்கியமா கண்ணே ¦ºளக்கியமா
¦ºளக்கியமா கண்ணே ¦ºளக்கியமா
¦ºளக்கியமா ¦ºளக்கியமா

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்

தனதோம்தோம் ததீம்தீம் ததோம்தோம் ததீம் என
விழிகளில் நடனமிட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதைத் தழுவும் ஒரு அம்பானாய் (2)
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய் (2)
ஜணுததீம் ஜணுததீம் ஜணுததீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ…

(¦ºளக்கியமா)

சூரியன் வந்து வாவெனும்போது (3)
என்ன செய்யும் பனியின் துளி (2)
கோடி கையில் என்னைக் கொள்ளையிடு தோடி கையில் என்னை அள்ளியெடு (2)
அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசமில்லை (4)
அது கிடக்கட்டும் விடு உனக்கென்ன ஆச்சு?

(¦ºளக்கியமா)
(தனதோம்)
(தனதோம்தோம்)
(¦ºளக்கியமா)

——————————————————————————–

பாடல்: முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்
குரல்: சுஜாதா, ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும்…ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழையுண்டு மேகமில்லை

கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி
அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன
சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்
பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன
விதையொன்று உயிர் கொள்ள வெப்பக்காற்று ஈரம் வேண்டும்
காதல் வந்து உயிர் கொள்ள காலம் கூட வேண்டும்
ஒரு விதை உயிர் கொண்டது ஆனால் இரு நெஞ்சில் வேர் கொண்டது

சலங்கையே கொஞ்சம் பேசு மௌளனமே பாடல் பாடு
மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீர் உரையாடும் அதில்
கவிதை அரங்கேறும்

பாதையும் தூரம் நானொரு பாரம்
என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா
உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு சுமையா
பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா
தந்தை தந்த உயிர் தந்தேன் தாய் தந்த உடல் தந்தேன்
உறவுகள் எல்லாம் சேர்த்து உன்னிடம் கண்டேன்
மொத்தத்தையும் நீ கொடுத்தாய் ஆனால்
முத்தத்துக்கோ நாள் குறித்தாய்

(முதல்முறை)

——————————————————————————–

பாடல்: மார்கழித் திங்கள் அல்லவா
குரல்: உன்னிகிருஷ்ணன், எஸ் ஜானகி, குழுவினர்
வரிகள்: வைரமுத்து

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்…

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா (2)
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா

(மார்கழி)

இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

(மார்கழி)

சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி…ஆஆஆ… ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் (2)
வா…

(மார்கழி)

——————————————————————————–

பாடல்: ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
குரல்: எம் எஸ் விஸ்வனாதன், ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

ஆலாலகண்டா ஆஆஆ…
சல்சல் இக்குசல் சல்சல் இக்குசல் (8)

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்சே வணக்கமுங்க வணக்கமுங்க

(சல்சல்)

என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் நீ இல்லை இல்லை என்ற போதும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமய்யா நிக்காது ஒரு போதும்

வணக்கம் வணக்கமுங்க ஆஹா வணக்கம் வணக்கமுங்க
வணக்கமுங்க…வணக்கமுங்க

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்

——————————————————————————–