Roja - Lyric (Tamil)

பாடல்: சின்ன சின்ன ஆசை
குரல்: மின்மினி
வரிகள்: வைரமுத்து

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை

வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை

(சின்ன)

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை
கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை

(சின்ன)

சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

(சின்ன)



powered by ODEO


பாடல்
: காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
குரல் : எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள் : வைரமுத்து

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்

கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

(காதல்)

தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
தேகம் ரெண்டும் சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால் வார்த்தை இல்லை கண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே

முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

(காதல்)

வீசுகின்ற தென்றலே வேலை இல்லை இன்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மை இல்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தல் இல்லை தேய்ந்து போ

பூமி பார்க்கும் வானமே புள்ளியாகத் தேய்ந்து போ
பாவை இல்லை பாவை தேவை என்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

(காதல்)





பாடல்
:
புது வெள்ளை மழை
குரல்: உன்னி மேனன், சுஜாதா
வரிகள் :
வைரமுத்து


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இதம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கடல் நானே
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே

(புது வெள்ளை)

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ வெடுக்கென்று மலரும்
நீ பருகாத போதிலே உயிர்ப் பூ சருகாக உலரும்
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது

(புது வெள்ளை)

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூகேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
மலர் மஞ்சம் காணாத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ

(புது வெள்ளை)






Thamizha Thamizha - (Hariharan)


powered by ODEO

Rukkumani - (S.P. Balasubramaniam)


powered by ODEO



Click Here for lyrics in English