Indira - Lyric

பாடல்: நிலாக் காய்கிறது
குரல்: ஹரிணி
வரிகள்: வைரமுத்து

நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ…வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

(நிலாக்)

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

(நிலாக்)
——————————————————————————–

பாடல்: நிலாக் காய்கிறது
குரல்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ…வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

(நிலா)

அதோ போகின்றது கானல் மேகம் மழையை காணவில்லையே
இதோ கேட்கின்றது குயிலின் சோகம் இசையும் கேட்கவில்லையே
இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்கையே சீதனம் அதில் ஜீவனே தேயுதே

(நிலாக்)
——————————————————————————–

பாடல்: தொடத்தொட மலர்வதென்ன பூவே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வைரமுத்து

தொடத்தொட மலர்வதென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

(தொடத்தொட)

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பரித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன

(தொடத்தொட)

பனிதனில் குளித்த பால்முகம் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

(தொடத்தொட)
——————————————————————————–

பாடல்: விடியாத இரவென்று எதுவுமில்லை
குரல்: சுஜாதா?
வரிகள்: வைரமுத்து

விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

(ஹே அச்சம்)

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளையசெல்லியே…வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

(ஹே அச்சம்)

லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2)

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

(இனி அச்சம்)

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்
——————————————————————————–

பாடல்: ஏ ஓடக்கார மாரிமுத்து
குரல்: ஸ் பாலசுப்ரமணியம், சீர்காழி சிவசிதம்பரம், குழுவினர்
வரிகள்: வைரமுத்து

பச்ச பாவக்கா…பளபளங்க…பழனி பச்ச…மினுமினுங்க…
செங்கருட்டி…செவத்தபுள்ள…கின்னாவந்தா…கினுகட்டி…
உடும்பு…துடுப்பு…மகா…சுகா…
பா…பரங்கி…எட்டுமண்…குண்டுமண்

ஏ ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க ¦ºளக்கியமா
ஏ அரிசிக்கட ஐய்யாவுப் பொண்ணு ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு ¦ºளக்கியமா

பழைய பாக்கி இருக்குதா பையன் மனசு துடிக்குதா (2)

பட்டணத்து ஸ்டைலக்கண்டா பட்டிக்காடு கசந்திடுமா
பள்ளிக்கூட நெனப்பிருக்கே பாவி மனம் மறந்திடுமா
பட்டுப்பாவாடக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது

(ஓடக்கார)

குண்டுப் பொண்ணு கோமலவள்ளி என்னானா என்னானா
ரெட்டப்புள்ள பொறந்ததுமே நூலானா நூலானா
குள்ள வாத்து டீச்சர் கனகா
ஐயோ…பார்வையில பச்ச மொளகா
மேற்படிப்பு படிக்கப் போனா மேற்கொண்டு என்ன ஆனா
மொத்தத்துல மூணு மார்க்கில் ஃபெயிலானா ஃபெயிலானா
ஒல்லிக்குச்சி ராஜமீனா ஓடிப்போனா என்ன ஆனா
பூசணிக்கா வயிறு வாங்கித் திரும்பி வந்தாளே

(ஏ ஓடக்கார)

அம்மன் கோயில் வேப்பமரம் என்னாச்சு என்னாச்சு
சாதிச் சண்ட கலவரத்துல ரெண்டாச்சு ரெண்டாச்சு
மேலத்தெரு கருப்பையாவும் கீழத்தெரு செவத்தம்மாளும்
சோளக்காட்டு மூலையில ஜோடிசேர்ந்த கதையென்னாச்சு
மூத்த பொண்ணு வயசுக்குத்தான் வந்தாச்சு வந்தாச்சு
மத்த கதை எனக்கெதுக்கு எங்குருவி எப்படி இருக்கு
தாவிச்செல்லு குருவி இன்னிக்கு தாவணி போட்டிருக்கு

(ஏ ஓடக்கார)
——————————————————————————–

பாடல்: மயிலக்காள மருதக்காள
குரல்: சுவர்ணலதா, குழுவினர்
வரிகள்: வைரமுத்து

மயிலக்காள மருதக்காள மணிக்கயித்துல சோடி சேரு
வெளுத்தகாள செவத்தகாள எடம் வலமா சோடி சேரு

மாரி மாரி பொழிய வேணும்…ஏலாலங்கடி ஏலாலம்
பூமித்தாயி குளிரவேணும்…ஏலாலங்கடி ஏலாலம்
வானம் பாத்த கரிசக்காடு…ஏலாலங்கடி ஏலாலம்
மனசு போல எளக வேணும்…ஏலாலங்கடி ஏலாலம்

முன்னேருதான் பூட்டி…ஏலேலங்கடி ஏலோ
போறவழி நீ காட்டு…ஏலேலங்கடி ஏலோ
பின்னேருதான் பூட்டி…ஏலேலங்கடி ஏலோ
சொல்லிக்கொடு ஒரு பாட்டு…ஏலேலங்கடி ஏலோ

பொன்னேரு பூட்டி…ம்ம்ம்
வெத போட வேணும்…போட வேணும்
முத்தாக வௌளஞ்சு…ம்ம்ம்
பசியாற வேணும்…ஆர வேணும்
ஏலாலங்கடி ஏலாலம்…ஏலாலங்கடி ஏலாலம்
ஏலாலங்கடி ஏலாலம்…ஏலாலங்கடி ஏலாலம்

தந்தானனா தானா…ஏலாலங்கடி ஏலாலம்
தானதன்னா தானா…ஏலாலங்கடி ஏலாலம்
தன்னனன்னா தானானா…ஏலாலங்கடி ஏலாலம்
தன்னனன்னா தானானா…ஏலாலங்கடி ஏலாலம்