Gentleman - Lyric

பாடல்: என் வீட்டுத் தோட்டத்தில்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சுஜாதா
வரிகள்: வைரமுத்து

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே

வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌளனங்கள் கூடாது
வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது
ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது
ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது
ஆசை துடிக்கின்றதே

(என் வீட்டுத்)

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போலே சொல்லாமல் நின்றேனே
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது
எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது
ம்ம்ம்…அனுபவமோ

(உன் வீட்டுத்)





——————————————————————————–

பாடல்: ஒட்டகத்தக் கட்டிக்கோ
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம் & எஸ் ஜானகி
வரிகள்: வாலி

ஒட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை

(ஒட்டகத்தக்)

கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது
உள்ளங்கைத் தேனே கள்வன் நாந்தானே
கள்வனைக் கொள்ளை கொண்ட கள்ளி நீதானே
பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை
அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை

(ஒட்டகத்தக்)

உடைவாளில் நீயெந்தன் உடைதொட்ட அன்னேரம்
உன் பார்வை எந்தன் உயிர்தொட்ட தருவாயோ
கோழைக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்க்கை என்னாகும்
உன் வாளுக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்வே பொன்னாகும்
நீயென்னை மீண்டும் திருடத்தான் வேண்டும்
முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும்

(ஒட்டகத்தக்)

——————————————————————————–

பாடல்: உசிலம்பட்டி பெண்குட்டி
குரல்: ஷாகுல் ஹமீது, ஸ்வர்ணலதா
வரிகள்: வைரமுத்து

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு - உன்
ஒசரம்பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு
கூடமேல கூடமேலவெச்சு குச்சனூரு போறவளே
மெதுவாகச் செல்லேண்டி - உன்
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதடி
குதிபோட்டு வந்தேண்டி

உசில உசில உசிலம்பட்டி (2)

கண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா
மைய வெக்கும் சாக்க வெச்ச கைய்ய வெப்பே தெரியாதா
அலங்கனல்லூர் ஜல்லிக்கட்டு சேர்ந்துபோனால் ஆகாதா
மாடுபுடிச்சி முடிச்ச கைய்யில் மயிலப் புடிப்பே தெரியாதா
மயிலே மயிலே இறகொண்ணு போடு
வானம் விழுந்தா அதுவும் போடு
இறகு எதுக்கடி தோகையே கெடைக்கும் அதுக்கும் காலம் வரும்

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு - நீ
ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத் தாச்சி
கூடமேல கூடவெச்சு குச்சனூரு போறவள
உருவித்தான் பார்க்காதே - என்
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
துருவித்தான் கேட்காதே

உசில உசில உசிலம்பட்டி (2)

வெடலப்பொண்ணு நுனினாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு
வேப்பமரத்துக் கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு?
இடுப்புச் சேல எடவெளியில் எனக்கு மட்டும் எடமிருக்கு
ஆசபட்ட மாமனுக்கு ஆண்டிப்பட்டி மடமிருக்கு
தணியும் தணியும் தானா தணியும்
தடியால் அடிச்சா கொடியா மலரும்
மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது
அதுதான் பெண்ணின் குணம்

(உசிலம்பட்டி)

——————————————————————————–

பாடல்: சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு
குரல்: சுரேஷ் பீட்டர்ஸ், பிரகாஷ்
வரிகள்:

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு அட கலக்குது பார் இவ ஸ்டைலு…
சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு…

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு அட கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு
சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு அட கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு
சின்னப்பொண்ணிவ படிப்பது எத்திராஜா மனசையெல்லாம் சலவை செய்யும்
சொட்டு நீலமிவ பார்வையில் உருவாச்சா வயசுப்பசங்கள விழியில புடிச்சா

(சிக்குபுக்கு)

நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார்பைக்கத்தான் பார்ப்பீங்க
நாங்க மோட்டார்பைக்கிலே வந்தாக்கா நீங்க மாருதிக்கு மாறுவீங்க
நாங்க ஜீன்ஸ் பேண்டுத்தான் போட்டாக்கா நீங்க பேகி பேண்டுத்தான் பார்ப்பீங்க
நாங்க பேகி பாண்டுத்தான் போட்டாக்கா நீங்க வேட்டியத்தான் தேடுவீங்க
ஒண்ணுமே வெவரங்கள் புரியல்லே என்னத்தான் புடிக்குமோ தெரியல்லே
அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு மொத்தத்தில் பைத்தியம் புடிச்சாச்சு

(சிக்குபுக்கு)

நாங்க ஆடிப்பாடித்தான் களச்சாச்சு இங்க அலஞ்சு திரிஞ்சிதான் வெறுத்தாச்சு
இப்போ குழம்பி குழம்பித்தான் முடிபோச்சு வாலிபந்தான் திரும்ப வருமா
ஒங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ள டௌளரி அதிகம் கேட்கலாம் ஆண்பிள்ள
அத வச்ச பின்புதான் பூமால அப்படியொரு அவதி ஏம்மா?
இப்பவே கெடச்சத ள்V பண்ணா நிக்கலாம் செலவின்றி மணப்பெண்ணா
அப்புறம் அவஸ்தைகள் கிடையாது அப்பனின் சேமிப்பும் குறையாது

(சிக்குபுக்கு)

Lyric in English