Duet - Lyric

பாடல்:அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
குரல்:எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்:வைரமுத்து

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

(அஞ்சலி)

காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துலி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி

(பூவே)

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரல் வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி

(அஞ்சலி)

அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா?
பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா?
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி...

(பூவே)



பாடல்:மெட்டுப்போடு மெட்டுப்போடு
குரல்:எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:வைரமுத்து

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு

எத்தனை சபைகள் கண்டோம் எத்தனையெத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு

(மெட்டுப்போடு)

இது மக்கள் பாட்டு தன்மானப்பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்கைப்பாட்டு
கல்லூரிப்பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு

இது கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு
கட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு
தாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு
தமிழ்மக்கள் வீட்டைச்சென்று தட்டும் பாட்டு

(மெட்டுப்போடு)

இனி கண்ணீர் வேண்டாம் புதுக்கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க
மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க

(மெட்டுப்போடு)